ஒடிசா மாநிலம் பூரி அருகே சுற்றுலா பேருந்தில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலம் பூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

பூரி-புவனேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் மாலதிபட்பூர் பேருந்துநிலையம் அருகே சுற்றுலா பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day