ஜூன் 25ஆம் தேதி - அரசியல் சாசன படுகொலை தினம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதியை அரசியல்சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சர்வாதிகார மனப்போக்குடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது எந்த தவறும் செய்யாத லட்சக்கண்க்கான மக்கள் சிறையில் தள்ளப்பட்டதாகவும், ஊடங்களின் குரல் நசுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1975ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் போது மனிதாபிமானமற்ற முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

Night
Day