பயங்கரவாதிகள் தாக்‍குதலில் 26 பேர் உயிரிழப்பு - டெல்லியில் இன்று மாலை அனைத்துக்‍கட்சி ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதையொட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசியுள்ளனர். இன்று நடைபெற உள்ள அனைத்துக்‍கட்சி கூட்டத்தில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்‍கைகள், இனி மேற்கொள்ள உள்ள நடவடிக்‍கை குறித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா ஆகியோர் அனைத்து கட்சி தலைவர்களுக்‍கு எடுத்து கூற உள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இந்தக்‍கூட்டத்தில் விளக்‍க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது.

Night
Day