ராகுலின் பேச்சை தவறாக திரித்துப் பரப்புவது நெறிமுறையற்ற செயல்-சங்கராச்சாரியார் சாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவையில் ராகுல் காந்தியின் உரைக்கு ஜோதிர் மடத்தின் 46-வது சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​பாஜக தலைவர்கள் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதாக ராகுல் காந்தி சாடினார். இதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி முத்திரை குத்தியதாக குற்றம் சாட்டினார். இந்தநிலையில் ராகுல் காந்தியின் முழு உரையையும் கவனமாகக் கேட்டதாகவும், இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்பதை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்தியதாகவும் சங்கராச்சாரியார் கருத்துத் தெரிவித்துள்ளார். ராகுல் உரையின் ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து பரப்புவது நெறிமுறையற்ற செயல் என்றும் கூறியுள்ளார்.

varient
Night
Day