ஆப்பிள் நிறுவன வியாபார தந்திரங்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்பிள் நிறுவனத்தின் வியாபார தந்திரங்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில், ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஆப்பிள் நிறுவனம் அதற்காக தொழில்நுட்ப ரீதியிலான யுக்திகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வைத்திருக்கும் ஒருவரால், வேறு ஒரு நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட் வாட்சை, ஐபோனுடன் இணைக்க முடியாது. இதேபோல், பல யுக்திகளில், ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதே நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளடுஹ். இதனால், சிறிய நிறுவனங்கள் பாதிப்படைவதாக கூறி அமெரிக்க நீதித்துறை ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அதேவேளையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனமும் முறையிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு தான் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Night
Day