தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை அரசு பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி நம்பிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும் பறிமுதல் செய்த படகுகளை திருப்பித் தருவதாகவும் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர்  மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இதுவரை வழங்கப்படாத வகையில் முதன்முறையாக, கொழும்புவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர சதுக்கத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி- இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாக முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது, இலங்கையின் கிழக்குப் பகுதிக்கு இந்தியாவின் பல்துறை மானிய உதவியை வழங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு தலைவர்களும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தையும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு தலைவருக்கு இலங்கையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான மித்ர விபூஷணத்தை அதிபர் திசநாயக வழங்கி கவுரவித்தார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 
அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் கவலைகளை எழுப்பியதாகவும், மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்னையை அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திருப்பித் தருவதாகவும் இலங்கை அதிபர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான முறையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அனுர குமார திசாநாயக்க உறுதியளித்தாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Night
Day