மதுரையில் துணியால் வாயை பொத்தி இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மண்டேலா நகர் பகுதியில் இளம் பெண்ணிடம் மர்ம நபர் செயினை பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் அருகே நாகப்பாநகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது வெள்ளைத் துணியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அப்பெண்ணின் வாயை பொத்தி, அவர் அணிந்திருந்த செயினை பறித்தார். அப்போது பெண் கூச்சலிட்டதால் அருகில் உள்ளவர்கள் மர்ம நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடினார். மேலும் அந்த பெண் அணிந்திருந்தது வெள்ளிச் செயின் என்பதால் அவர் போலீசில் புகாரளிக்கவில்லை. இந்த நிலையில் செயின் பறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பான சூழலில் பெருங்குடி போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day