வியட்நாமில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மாவின் 77-வது பிறந்தநாள் வியட்நாம் நாட்டில் இருக்கும் தமிழர்களால் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் புரட்சித்தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வியட்நாம் நாட்டின் டானாங் நகரில் வசிக்கும் அம்மாவின் தொண்டர்கள் மற்றும் பல்வேறு நாட்டுத் உலக தமிழர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். அம்மாவின் புகழ் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் என்றும் நிலைத்து நிற்கும் எனவும், அம்மாவின் புகழ் ஓங்குக என வாழ்த்து முழக்கம் எழுப்பியும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினர்.

அம்மாவின் புகழ் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் என்றும் நிலைத்து நிற்கும் என்றும், அம்மாவின் பிறந்தநாளை வியட்நாமில் தமிழர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அங்கு வாழும் தமிழர்கள் தெரிவித்தனர். 


Night
Day