எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசுக்கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை வீழ்த்திய டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் அதிபரக இன்று இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக வெள்ளை மாளிகையின் உள் அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 1985ம் ஆண்டுக்குப் பிறகு அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். பாரம்பரிய தேவாலய சேவை, வெள்ளை மாளிகை தேநீர் விருந்தை தொடர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதிபராகப் பதவியேற்ற பிறகு சிறப்புரையாற்றும் டிரம்ப், அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டத்தையும் விளக்க உள்ளார். இதே நிகழ்ச்சியில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸும், பதவியேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சுந்தர் பிச்சை போன்ற உலகளாவிய வணிகத் தலைவர்களும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.