உயர்நீதிமன்றத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையில் ஜகபர் அலி கொலை அரங்கேறியுள்ளது - ஹென்றி திபேன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உயர்நீதிமன்றத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையில் புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை அரங்கேறியுள்ளதாக மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி திபேன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2022ல் இருந்து தற்போது வரை கனிமவளம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது தொடர் கதையாகி இருப்பதாகவும், வாகன விபத்தில் அவர்கள் உயிரிழந்ததாக வழக்குப் பதியப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், உயர்நீதிமன்றத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையில் புதுக்கோட்டை சமூக ஆர்வலரின் கொலை அரங்கேறியிருப்பதாக குறிப்பிட்ட ஹென்றி திபேன், இயற்கையை பாதுகாக்க நினைக்கும் சமூக ஆர்வலர்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தினார். 

Night
Day