வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  

துருஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுரேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் சூதாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி சுரேஷை சூதாட்டத்தில் ஈடுபடும் நண்பர்கள் மது அருந்த வருமாறு அழைத்ததாக  கூறப்படுகிறது. அப்போது, அங்கு சென்ற சுரேஷிடம் மது போதையில் இருந்த நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சரத், தர்மதுரை, தென்பாண்டியன், சுரேஷ் ஆகிய நான்கு பேரும் சுரேஷை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 4பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Night
Day