ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த விபரீதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி வழக்கறிஞர் சுமதி. இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமார் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பாலமுருகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், 5 கோடி ரூபாய் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 


Night
Day