ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 52 சவரன் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் வென்னாம்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 52 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வென்னாம்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ராமநாதன், கடந்த 21ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். 15 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய ராமநாதன் வீட்டின் பின்பக்க கதவு உடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். படுக்கையறையின் கதவை உடைத்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 52 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராமநாதன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

varient
Night
Day