கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் செங்கல்நத்தம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த தயாளன்-தமிழரசி தம்பதிக்கு ஒன்றரை வயதில் கவின் என்ற குழந்தை உள்ளது. தயாளனுக்கும்- தமிழரசிக்கும் இடையே திங்கள் கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழரசி அதே பகுதியில் வேப்பமரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சோளிங்கர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழரசிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் R.T.O விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Night
Day