குடிபோதையில் அண்ணனை கொடுவாளால் வெட்டி கொலை செய்த தம்பி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அருகே குடிபோதையில் அண்ணனை கொடுவாளால் வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

காரிமங்கலம் அடுத்த சாவடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இவரது உடன் பிறந்த தம்பியான ரகுவிற்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று இரவு அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மோகன் தனக்கு ஏன் திருமணம் செய்து வைக்க முயற்ச்சிக்கவில்லை என தம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை அருகில் இருந்த குப்பையில் புதைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ரகுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day