காதலியிடம் செல்போனில் பேசியதால் கொலைவெறி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே தனது காதலியிடம் செல்போனில் பேசிய நண்பர் மீது தாக்குதல் நடத்திய சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்த சூரியா என்பவரது பெண் தோழியிடம் சூரியாவின் நண்பரான பிரபு செல்போனில் பேசி வந்துள்ளார். இதனையறிந்த சூரியா தனது மற்றொரு நண்பரான சிவாவுடன் சேர்ந்து பிரபுவை தாக்க திட்டம் தீட்டினார். அதன்படி, சம்பவத்தன்று மது அருந்த சென்றவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த சூரியா, சிவாவுடன் இணைந்து பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான, வீடியோ காட்சி வெளியான நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Night
Day