ஒன்றரை மாத பெண் குழந்தை ரூ.2,20,000க்கு விற்பனை - தாய், தந்தை உள்பட 6 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஒன்றரை மாத பெண் குழந்தையை 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணகிநகரை சேர்ந்த ஸ்ரீஜித், வினிஷா தம்பதியருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளநிலையில் 4வதாக பிறந்த பெண் குழந்தையை புரோக்கர்கள் உதவியுடன் திருவண்ணாமலையில் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விற்பனை செய்துள்ளனர். இதற்கு முன்பணமாக 70 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்த பிறகு ஒன்றரை லட்சம் ரூபாயும் அந்த தம்பதியர் கொடுத்துள்ளனர். அந்த பணத்தை புரோக்கர்கள் பிரித்து எடுத்து கொண்டு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் வந்த நிலையில், போலீசார் விசாரணையில் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தாய், தந்தை, மாமியார் விற்பனைக்கு உதவிய பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

Night
Day