சாலையோரம் இருந்த மிதிவண்டியை திருடிச் சென்ற தம்பதி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை முகப்பேர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையோரம் இருந்த மிதிவண்டியை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

முகப்பேர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டி திருட்டு போனதாக ஜெ-ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி மிதிவண்டியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது தீன் மற்றும் ஸ்ரீ தேவி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Night
Day