சென்னை தி.நகர் குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில், பூட்டை உடைத்து 9 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையின் பரபரப்பான பகுதியான தி.நகரில் இயங்கிவரும் குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 4வது தளத்தில் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் இருந்த 9 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாம்பலம் காவல்நிலையத்தில் புகாளிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day