சமூகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர்கிறாரா இல்லையா - அண்ணாமலை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையித்தில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் வெற்று விளம்பரத்தில் லயித்து கிடக்கிறார் என்று கூறிய அவர், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒவ்வொரு  குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் சமூகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர்கிறாரா இல்லையா என்றும் அண்ணாமலை எக்ஸ் பதிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Night
Day