திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனத்தில் இயங்கி வரும் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவிக்கு, அங்கு பணியாற்றி வரும் பேராசிரியர் குமார் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மாணவியின் பெற்றோர், இதுதொடர்பாக திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின்னர் பேராசிரியர் குமாரை போலீசார் கைது செய்து திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Night
Day