பட்டாசு ஆலை வெடி விபத்து - சிகிச்சை பலனின்றி பெண் தொழிலாளி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 

கோவில்புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி சத்தியபிரபு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமலட்சுமி என்ற பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 8ம் தேதி மீனம்பட்டியை சேர்ந்த சைமன் டேனியல் என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று வீரலட்சுமி என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. 

Night
Day