பாலிடெக்னிக் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..! சம்பவத்தை குழி தோண்டி புதைக்க சதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தரமணியில் இயங்கி வரும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி படித்து வரும் மாணவி 7 பேர் கொண்ட கும்பலால் மிக கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் விளம்பர திமுக அரசுக்கு உடந்தையாக கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும்  சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவிக்கு என்ன நடந்தது என்ற விரிவான செய்தித்தொகுப்பை பார்க்கலாம்...

தரமணி அரசு மகளிர் பாலிடெக்னின் கல்லூரியில் தங்கி படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளை காரணம் காட்டி அரசு கல்லூரி நிர்வாகம் சம்பவத்தை குழி தோண்டி புதைக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணியில் இயங்கி வரும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் 7 பேர் கொண்ட கும்பலாம் மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

இன்ஸ்டா மூலம் அறிமுகமான நண்பருடன் மாணவி OUTING சென்றிருந்த நிலையில் மாணவிக்கு போதை வஸ்துக்களை கொடுத்து 7 பேர் கொண்ட கும்பல் வெறிநாய்களை போல கடித்து குதறி பாலியல் வெறியாட்டம் ஆடியுள்ளது. 16ம் தேதி காலை அரசு மகளிர் பாலிடெக் கல்லூரியின் விடுதியில் இருந்து புறப்பட்ட மாணவி மறுநாள் காலை உடல் முழுவதும் காயங்களோடும் கடித்து குதறப்பட்ட தடங்களோடும் விடுதிக்கு திரும்பிய நிலையில் கல்லூரி நிர்வாகம் சம்பவத்தை மூடி மறைக்க எடுத்த நடவடிக்கைகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகாயங்களோடு திரும்பிய மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக மாணவியின் பெற்றோரை வரவழைத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு டி.சி கொடுத்து அனுப்பியுள்ளது கல்லூரி நிர்வாகம். அதுமட்டுமா... இந்த விவரம் வெளியே கசிந்துவிட கூடாது என்பதற்காக கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த 206 மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் அவர்களின் செல்போன்களையும் பறித்து அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் CONTACT NO உள்ளிட்ட அனைத்தையும் அழித்து இப்படியொரு மாணவி கல்லூரியில் படிக்கவே இல்லை என்ற அளவுக்கு, தடயமே இல்லாமல் அனைத்து ஆதாரங்களையும் அழித்துள்ளது கல்லூரி நிர்வாகம். 

இந்த நிலையில் தான் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் சம்பவத்தை மூடிமறைக்க பார்ப்பதாக கூறி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு, இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்தே சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த போராட்டத்தின் மீது காவல்துறையின் அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு களேபரமான சூழல் உருவானது.

16ம் தேதி காலையே மாணவி விடுதியில் இருந்து புறப்பட்ட நிலையில் அன்று மாலை 6 மணி ஆகியும் மாணவி மீண்டும் விடுதிக்கு திரும்பாததை வருகை பதிவேட்டின் மூலம் உறுதிப்படுத்திய கல்லூரி நிர்வாகம், போலீசில் புகார் அளித்து மாணவியை தேடும் முயற்சிகளை முன்னெடுக்காமல் அலட்சியம் காட்டியதே காம வெறியர்களின் வேட்டைக்கு மாணவி இரையாகியாக  காரணமாக அமைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியையே டிஸ்மிஸ் செய்து ஆளும் விளங்கா திமுக அரசுக்கு ஆதரவாக அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பது கொடூரத்தின் உச்சமாகவே உள்ளது. 



அண்ணா பல்கலைகழக மாணவி பல்கலைகழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்ற ரீதியில் பெரும் பேசுபொருளானது. இந்தநிலையில் சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அரசு பாலிடெக்னின் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளி உலகுக்கு தெரிந்தால் அது விளங்கா திமுக ஆட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே சம்பவத்தை குழி தோண்டி புதைக்க கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
தற்போது தரமணி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்வி பயிலும் உரிமையை மீட்டுத்தருவதோடு, FIR பதிந்து மாணவியை சூறையாடிய காமகயவர்களுக்கு உரிய தண்டனை பெற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Night
Day