எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜிம்மிற்கு பயிற்சிக்கு வந்த பெண்ணிடம் ஆசைக்கூறி கர்ப்பமாகி விட்டு திருமணத்திற்கு மறுத்த ஜிம் பயிற்சியாளரால் தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்... ஜிம் பயிற்சியாளரை போலீசார் கைது செய்த சம்பவம் குறித்ததான செய்தி தொகுப்பை விரிவாக பார்க்கலாம்....
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த பழவாத்தான் கட்டளையை சேர்ந்த 31 வயதான பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இதனிடையே, அந்த பெண் சாக்கோட்டை-நீடாமங்கலம் சாலையில் செயல்பட்டு வரும் பத்ம குமரன் என்பவரது ஜிம்மில் பயிற்சி பெற கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சேர்ந்துள்ளார். அப்போது, இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனை சாதகமாக பயன்படுத்திய பத்ம குமரன் பெண்ணிடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாகியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து 38 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு, 30 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது, அந்த பெண் 5மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பத்ம குமரன் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். பத்ம குமரனின் செயலால் மனமுடைந்த அந்தப் பெண் வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்ம குமரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், பெண்ணை திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்ததாக பத்மகுமரனின் தாயார் புனிதாதேவியும் சேர்க்கப்பட்டுள்ளார்.