பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம்: இளைஞரை கைது செய்த தனிப்படை போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். காரண்யானேந்தல் கிராமத்தை சேர்ந்த பர்வீன் பானு என்பவர் கடந்த 15ம் தேதி அதே பகுதியில் உள்ள கண்மாயில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து தனிப்படை போலீசார் சடலத்தை கைப்பற்றி குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், பர்வீன் பானுவை கொலை செய்த கருங்குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவத்தன்று வயலுக்கு சென்ற பர்வீன் பானுவை, காளிதாஸ் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, உடலை குளத்தில் மூழ்கடித்து வைத்து விட்டு அவரது சடலத்தின் மீது பெரிய கல்லை வைத்து விட்டு சென்றதும் அம்பலமானது. 

Night
Day