மகன் விவகாரத்தில் கணவன் - மனைவி இடையே யுத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்துக்காக கூலிப்படை வைத்து தனது மகனை கடத்த முயற்சித்ததாக பெண் ஒருவர் முன்னாள் கணவர் மீது  திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில், முன்னாள் மனைவி அளித்த புகாரில் உண்மையில்லை என தொழிலதிபர் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகர் பகுதி சேர்ந்தவர் தொழிலதிபர் பிரசன்னா. இவரது மனைவி திவ்யா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகனை முன்னாள் கணவன் பிரசன்னா கடத்திவிட்டதாக காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருமங்கலம் காவல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக தொழிலதிபர் பிரசன்னா எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டார். மேலும், குழந்தை கடத்தப்பட்டதாக முன்னாள் மனைவி திவ்யா அளித்த புகாரில் உண்மையில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுப்படியே தாயிடம் இருந்த மகனை நண்பர் கோபாகிருஷ்ணனை வைத்து அழைத்து வந்ததாகவும் பிரசன்னா வீடியோவில் விளக்கமளித்தார். மேலும், தனது நெருங்கிய நண்பரான கோபாலகிருஷ்ணனை கூலிப்படை என வழக்குப்பதிவு செய்ததை ஏற்க முடியாது என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Night
Day