மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் பிரதீப் கைது சம்பவத்திற்கு அஞ்சி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜக்கமங்கலம், பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளரான பிரதீப் என்பவர், மதுரையில் பள்ளி அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க மாணவிகளை அழைத்து சென்றுள்ளார். இரண்டு நாட்கள் என்பதால் அறை எடுத்து தங்கிய நிலையில், மாணவி ஒருவரை அறைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனிடையே சொந்த ஊர் திரும்பிய மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் நடந்த விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப்பை கைது செய்ய முயன்றனர். அப்போது, பயத்தில் விஷம் குடித்து பிரதீப் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Night
Day