14 வயது சிறுமியை சீரழித்த லாரி ஓட்டுநர்... தாயும் உடந்தையாக இருந்த கொடூரம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி லாரி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலுக்கு சிறுமியின் தாயும் உடந்தை என்பது கொடுமையிலும் பெருங் கொடுமை. நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் விளம்பர திமுக ஆட்சியில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்த அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாணவிகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்ற அவலம் இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


அப்படியொரு பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம் தான் சேலம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. ஆத்துார் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து, அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான லாரி ஓட்டுநர் குமரேசன் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பின்னர் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

லாரி ஓட்டுநரின் தொல்லை எல்லை மீறவே, கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி, இது குறித்து தனது வகுப்பு ஆசிரியையிடம் முறையிட்டுள்ளார். பதறிப்போன ஆசிரியை, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது குறித்து சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளார்.

பெற்ற பிள்ளைக்கு நடந்த கொடூரம் குறித்து குழந்தைகள் நல மையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையை துவங்கினர் ஆத்தூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார். விசாரணையில், லாரி ஓட்டுநர் குமரேசனுக்கு, சிறுமியின் தாய் சசிகலாவுடன் பழக்கம் இருந்து வந்ததும், கடந்த, பிப்ரவரி மாதம் 17ம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தொடர்ந்து, சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். ஒரே நாளில், இரண்டு முறை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன் பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் குமரேசனுக்கு உடந்தையாக சிறுமியின் தாயும் இருந்து வந்த கொடூரம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, ஆத்தூர் மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, லாரி ஓட்டுநர் குமரேசன், இந்த படுபாதக செயலுக்கு உடந்தையாக சிறுமியின் தாய் ஆகியோர் மீது, ‘போக்சோ’ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு சம்பவத்திற்கு அவரது தாயே உடந்தையாக இருந்த கொடூரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day