நடிகைக்கு பாலியல் தொந்தரவு - தொழிலதிபர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ஜீவாவின் சிங்கம்புலி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நடிகை ஹனி ரோஸ், தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கேரளாவில் பிரபல நகைக் கடை உரிமையாளராக உள்ள பாபி செம்மனூர், தனது கடையின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஹனி ரோஸ் குறித்து பாபி செம்மனூர் ஆதரவாளர்கள் இணையதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஹனி ரோஸ் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வயநாட்டில் உள்ள ரெசார்ட்டில் தங்கியிருந்த பாபி செம்மனூரை போலீசார் கைது செய்தனர். வயநாட்டில் இருந்து கொச்சி அழைத்து செல்லப்பட்ட பாபி செம்மனூரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Night
Day