எழுத்தின் அளவு: அ+ அ- அ
வடசென்னை தாதா நாகேந்திரன் மற்றும் அவரது எதிர்கோஷ்டியினரின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோரை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வியாசர்பாடியில் உள்ள நாகேந்திரனின் வீடு மற்றும் அவரின் எதிரியான பெண் தாதா இலாமல்லி ஆகியோரின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இருதரப்பினரிடமிருந்து 51 பட்டகத்திகளை பறிமுதல் செய்த போலீசார், நாகேந்திரனின் சகோதரர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். பெண் தாதா இலாமல்லியின் மகன் நாகேந்திரனின் கோஷ்டியால் கடந்த 2019ம் ஆண்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.