"பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது" - நீதிபதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சு தொடர்பாக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.    


சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடியின் பேச்சு இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளதாகவும், அமைச்சரே இந்த வெறுப்பு பேச்சை ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது தமிழக காவல்துறை தற்போது வரை நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது எனவும், பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள், சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை சூமோட்டாவாக எடுக்கவும், இதுதொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி பெறவும் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Night
Day