கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு தேவை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட கோரிய  வழக்கில்  அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 ஆண்டுகளுக்குள்ளாக தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான, நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் 7 ஆண்டுகளாகியும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. ஆகவே உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இதுவரை எத்தனை பேர் பதிவு செய்திருக்கின்றனர்? என்பது தொடர்பான பட்டியலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day