தமிழகம்
மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99 ஆய?...
கள்ளக்குறிச்சி அருகே விவசாய பணிக்கு சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் திருமலை என்பவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பிற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் அவரை தேடி விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியில் உள்ள மின்சாரம் தாக்கி ஜானகிராமன் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99 ஆய?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99 ஆய?...