கள்ளக்‍குறிச்சி: அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்‍குடங்களுடன் கிராம மக்‍கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவரி கிராமத்தில், அடிப்படை வசதிகளை செய்துதராத ஊராட்சி நிர்வாகத்தைக்‍ கண்டித்து, அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புக்கிரவரி கிராமத்தில் உள்ள சாவடி பகுதிக்கு இரண்டு மாத காலமாக குடிநீர் வழங்கவில்லை எனவும், கழிவுநீர்க்‍ கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை எனவும் கிராம மக்‍கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அவ்வழியாக வந்த அரசு பேருந்து சிறைபிடித்து, காலிக்‍ குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது.

varient
Night
Day