சென்னை: ஆட்டோ மீது மாநகர அரசு பேருந்து மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே ஆட்டோ மீது மாநகர அரசு பேருந்து மோதி இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். சென்னை மந்தவெளியிலிருந்து பாரிஸ் நோக்கி சென்ற மாநகரப் பேருந்து, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் வந்தபோது, முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ராதிகா, அவரது உறவினர் மற்றும் இரண்டு வயது குழந்தை காயமடைந்தது. குழந்தைக்கு அருகாமையில் இருந்த ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Night
Day