எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்துத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர்ரெட்டி, மாநகரப் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்குனர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் சிஐடியு உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளன. இதில் சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள், தொழிற்சங்கங்களை பிரித்தாளும் திமுக அரசின் சூழ்ச்சியை கண்டித்து கண்ணில் கருப்புத்துணியைக் கட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதில் சுமுக முடிவு எட்டப்படுமா என போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.