நாகை: படகுகள், மீன்பிடி சாதனங்கள் வைக்கும் இடம் ஆக்கிரமிப்பு - மீனவர்கள் வேலை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் இடத்தை மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பதை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கும், புதிய கடற்கரைக்கும் இடையே உள்ள அலத்தில் பேரிடர் காலங்களில் அப்பகுதி மீனவர்கள்  மீன்பிடி சாதனங்கள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமித்து கம்பி வேலிகளை அமைத்துள்ளது. இதனால் தாங்கள் அவசர காலத்தில் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது எனவும், கம்பி வேலிகளை அகற்றவும் கோரி நம்பியார் நகர் கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day