நாகை: வாடிக்கையாளர் வாங்கி சென்ற இனிப்பில் புழு - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே இனிப்பு கடையில் வாங்கி சென்ற சோனாலி ரோல் இனிப்பில் புழு இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை பழைய பேருந்து நிலையம் கடைத்தெருவில் உமா ஸ்விட்ஸ் என்ற கடை உள்ளது.  இந்த கடையில் வாடிக்கையாளர் ஒருவர் சோனாலி ரோல் என்ற இனிப்பு வகையை வாங்கி வீட்டுக்குச் சென்றார். அவர், இனிப்பை சாப்பிட முயன்றபோது அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த அவர் உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், ஆய்வு செய்தனர்.

Night
Day