தமிழகம்
யானைகள் புத்துணர்வு முகாமை உடனே நடத்துக - திமுக அரசுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்...
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நல?...
நெல்லை மாவட்டம் சி.என். கிராமம் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து மலைப் பாம்புகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டன. இந்நிலையில், நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகே உள்ள சிஎன் கிராமத்தில் சாலையோரமாக 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்தப் பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. வெள்ளப்பெருக்கிற்கு பிறகு தொடர்ந்து மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை நெல்லை மாநகரப் பகுதியில் 16 மலைப் பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நல?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...