பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.
12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை பேரணி நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் 5 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து பிச்சை பாத்திரம் ஏந்தியும், விளம்பர திமுக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்ற 500 ஆட்டோ ஓட்டுநர்களை தடுத்த நிறுத்தி போலீசார் கைது செய்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர் சிறை நிரப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்

Night
Day