மயிலாடுதுறை: நகர மன்ற கூட்டத்தை புறக்‍கணித்து திமுக உறுப்பினர் வெளிநடப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் திமுக நகராட்சி நிர்வாகத்தைக்‍ கண்டித்து அக்‍கட்சி உறுப்பினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கணிணிகள் மற்றும் பிரிண்டர்கள் வாங்குவதற்காக நகராட்சி வருவாய் நிதியில் நான்கரை லட்சம் ரூபாய் செலவீனமாக ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு திமுகவைச் சேர்ந்த 29வது வார்டு உறுப்பினர் ரஜினி எதிர்ப்பு தெரிவித்தார். நகராட்சி நிதியை வீணடிப்பதாகவும், எந்தப் பணிகளும் தரமாக நடைபெறுவதில்லை என்றும் குற்றம்சாட்டி நகராட்சி ஆணையரிடம் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டத்தை புறக்‍கணித்து வெளிநடப்பு செய்தார். திமுக நகராட்சி நிர்வாகத்தைக்‍ கண்டித்து அக்‍கட்சியின் உறுப்பினரே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.

Night
Day