எழுத்தின் அளவு: அ+ அ- அ
பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவி வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய இரு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அப்பகுதியை பராமரிப்பதில் இருதுறைக்கும் இடையே குழப்பம் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பொதுப்பணி துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் இரு துறையினரையும் அழைத்து இரண்டு துறையினரிடம் உள்ள ஆவணங்களை கேட்டு பெற்றார்.
பொதுப்பணித்துறையினரிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லாதநிலையில், வனத்துறையினரிடம் பழைய குற்றால அருவி உள்ள இடம், காப்புக்காடு எல்லைப் பகுதிகளுக்குள் வருவதற்கான ஆவணங்கள் இருந்தநிலையில், பழைய குற்றால அருவியை வனத்துறையினர் பராமரிக்க ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.