வடகிழக்கு பருவமழை அக்.16-ல் தொடங்க வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை வரும் 16 அல்லது 18 ஆகிய இடைப்பட்ட நாளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் வளிமண்டல கிழடுக்குகளில் கிழக்கு - வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16 அல்லது 18 தேதிகளில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day