குடியரசு தலைவர் இன்று வேலூர் வருகை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தர உள்ளார்.

ஆன்மிக பயணமாக டெல்லியிலில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு திருப்பதி வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்து வேலூர் வருகிறார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு செல்லும் அவர், அங்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். மேலும் பொற்கோயில் வளாகத்தில் 5 கோடி​ ரூபாயில் கட்​டப்​பட்​டுள்ள தியான மண்​டபத்தையும் திறந்​து​ வைத்து மரக்கன்றுகளையும் நட உள்ளார்.

குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் தலைமையில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொற்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை ரெட் zone ஆக அறிவித்து, ட்ரோன்கள் பறக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனையடுத்து, நண்பகல் 12.30 மணிக்குப் பிறகே பொற்கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Night
Day