விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 10 கிராம மக்கள் போராட்டம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கண்டித்து 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக 10 கிராமங்களைச் சேர்ந்த விளைநிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கும்பரம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கும்பரம் கிராமத்தில் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், திட்டத்தை கைவிடாவிட்டால் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.

Night
Day