விதி மீறியதால் 10 மாடி கட்டடம் இடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 10 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தி.நகர் பாண்டிபஜாரில் 3 தளங்களுடன் வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியை மீறி 10 தளங்கள் வரை தனியார் கட்டுமான நிறுவனம் கட்டியிருந்தது. மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி, சிஎம்டிஏ-விடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் அரசிடம் மேல்முறையீடு செய்தது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்டிடத்திற்கு சிஎம்டிஏ சீல் வைத்தது . மேலும் கட்டடத்தை இடிப்பது குறித்துசென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள், அக்கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கினர்.

Night
Day