விளம்பர திமுக அரசு, சட்டம்-ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை இழந்து விட்டது - அன்புமணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய விளம்பர திமுக அரசு, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை இழந்து விட்டது என்று கடுமையாக சாடியுள்ளார். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வாழும் பகுதியிலேயே இளைஞர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்படுகிறார் என்றால் தமிழகத்தில் சட்டம்--ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் கொலை செய்யக் கூடாத இடங்கள் என்று எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கொலைகள் நடப்பதாகவும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day