திருச்சியில் ஒருபக்கம் கொலை - மறுபக்கம் கேரம் விளையாடும் முதல்வர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வித கவலையும் இன்றி கேரம் விளையாடியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் உள்ள பீமநகர் மார்சிங் பேட்டை பகுதியில் நின்றிருந்த தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மறுபக்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், முதியோர்களுடன் சேர்ந்து கேரம் விளையாடியதுதான் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது.

விளம்பர திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும் நிலையில் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினோ, எவ்வித கவலையுமின்றி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது, விழாக்களில் பங்கேற்பது என அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Night
Day