விளம்பர திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற உண்மை மீண்டும் ஒருமுறை உணர்த்தப்பட்டுள்ளது - நயினார் நாகேந்திரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக-வின் அலங்கோல ஆட்சியில் அடுத்தடுத்து தொடரும் படுகொலைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விளம்பர திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற உண்மை நெற்றியில் அடித்தாற் போல மீண்டுமொருமுறை உணர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட குற்றவாளிகளுக்கு சுத்தமாகக் குளிர்விட்டுப் போய்விட்டது என்றும், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கிடக்கையில் முழுநேர காவல்துறை தலைமை இயக்குனரை இன்னும் நியமிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளும் அரசின் ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது என்றும் அவர் சாடியுள்ளார்.

Night
Day