வேங்கை வயல் வழக்கு - குற்றப்பத்திரிகையில் முரண்பாடு

எழுத்தின் அளவு: அ+ அ-


வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். 

புதுக்கோட்டை வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

அதில், வேங்கைவயலை சேர்ந்த முரளி ராஜா, சுதர்ஷன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை குற்றவாளிகள் என குறிப்பிட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புகார் கொடுத்த நபர்களே குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாகவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், புகார்தாரரை இதுவரை விசாரிக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day